75 லட்ச ரூபாய் வீட்டுக் கடனுக்கு 20 வருட காலத்திற்கு EMI எவ்வளவு வரும்? - தெரிந்து கொள்ளுங்கள்!

Bharani

75 லட்ச ரூபாய் வீட்டுக் கடனுக்கு 20 வருட காலத்திற்கு EMI எவ்வளவு வரும்? – தெரிந்து கொள்ளுங்கள்!

latest news, தெரிந்து கொள்ளுங்கள்

75 லட்ச ரூபாய் வீட்டுக் கடனுக்கு 20 வருட காலத்திற்கு EMI எவ்வளவு வரும்? - தெரிந்து கொள்ளுங்கள்!
75 லட்ச ரூபாய் வீட்டுக் கடனுக்கு 20 வருட காலத்திற்கு EMI எவ்வளவு வரும்? – தெரிந்து கொள்ளுங்கள்!

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) அதன் மானிட்டரி பாலிசி மீட்டிங் (MPC) நடத்தும்போதெல்லாம் நடுத்தர குடும்பத்து நபர்களுக்கு அதற்கான முடிவு என்னவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எப்பொழுதும் இருப்பதுண்டு.

ஏனெனில் இந்த மீட்டிங்கின்போது எடுக்கக்கூடிய ரெப்போ விகிதம் குறித்த முடிவு அவர்களது வீட்டுக் கடன் EMI தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் ஒன்று. ரெப்போ விகிதம் என்பது கமர்ஷியல் வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்கும் வட்டி விகிதம் ஆகும். ரெப்போ விகிதம் அதிகமாக இருந்தால் கடன் வழங்குனர்கள் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தையும் அதிகரிப்பார்கள்.

இதனால் வீட்டுக்கடன் பெற்றவர்கள் அதிக EMI தொகை செலுத்த வேண்டியிருக்கும். எனினும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கடந்த ஒரு வருடமாக அதாவது பிப்ரவரி 2023 முதலிலிருந்து ரிப்போ விகிதத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருந்து வருகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), கனரா வங்கி, ICICI வங்கி, HDFC வங்கி, மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் 70 லட்ச ரூபாய் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதங்களை வசூல் செய்கின்றன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் 75 லட்ச ரூபாய் வீட்டுக் கடனை 20 வருட திருப்பி செலுத்தும் கால அளவுடன் பெற்றவர்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இதில் பிராசசிங் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை. மேலும் வங்கிகள் இதே கடனை பல்வேறு நபர்களுக்கு ஒரு சில காரணங்களின் அடிப்படையில் பல்வேறு வட்டி விகிதங்களில் வழங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

SBI 75 லட்ச ரூபாய் கடனை 8.50 சதவீதம் முதல் 9.85 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் வழங்குகிறது. அதாவது 20 வருட கால வீட்டுக் கடனுக்கான EMI, 65,087 ரூபாய் முதல் 71,633 ரூபாயாக இருக்கும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)

20 வருட கால அளவு கொண்ட 75 லட்ச ரூபாய் வீட்டுக் கடனுக்கு PNB 8.40 சதவீதம் முதல் 10.15 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை வசூல் செய்கிறது. இந்த வீட்டுக் கடனுக்கு நீங்கள் 20 வருட காலத்திற்கு 64,613 ரூபாய் முதல் 73,124 ரூபாயை EMIஆக செலுத்த வேண்டும்.

கனரா வங்கி

PSU வங்கி 75 லட்சம் ரூபாய் வீட்டுக்கடனுக்கு 8.45 சதவீதம் முதல் 11.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை பெறுகிறது. இந்த வட்டி விகிதத்தில் ஒருவர் 20 வருட காலத்திற்கு 64,850 ரூபாய் முதல் 78,694 ரூபாயை EMIஆக செலுத்த வேண்டும்.

ICICI வங்கி

இந்த தனியார் வங்கி 75 லட்ச ரூபாய் வீட்டுக் கடனுக்கு 8.75 வட்டி விகிதத்தை பெறுகிறது. அதாவது ஒருவர் 20 வருட காலத்திற்கு 66,278 ரூபாயை EMIஆக செலுத்த வேண்டும்.

HDFC வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக திகழும் HDFC வங்கி வங்கியில் ஹோம் லோனுக்கான வட்டி விகிதம் 8.75 சதவீதத்திலிருந்து துவங்குகிறது. 20 வருட காலத்திற்கு 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கு ஒருவர் 66,278 EMIஆக செலுத்த வேண்டும்.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி 75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கு 8.75 சதவீதம் முதல் 13.30 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஒருவர் 20 வருட காலத்திற்கு 66.278 ரூபாய் முதல் 89,476 ரூபாயை EMIஆக வழங்க வேண்டும்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment