TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய
செய்திகள்
விவசாயிகள் இயந்திரங்களுக்கு
மானியம்
பெறுவது
எப்படி?
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகள் மதிப்புக்கூட்டி
சந்தைப்படுத்தி
அதிக
லாபம்
பெறும்
வகையில்,
292 மதிப்புக்
கூட்டும்
இயந்திரங்களை
40 சதவீத
மானியத்தில்
வழங்கப்படும்.
அதன்படி, பருப்பு உடைத்தல், தானியம் அரைத்தல், மாவரைத்தல், கால்நடை தீவனம் அரைத்தல், சிறிய வகை நெல் அரவை இயந்திரம், நெல் உமி நீக்குதல், கேழ்வரகு சுத்தப்படுத்தி
கல்
நீக்குதல்,
தேங்காய்
மட்டை
உரித்தல்,
செடியிலிருந்து
நிலக்கடலையை
பிரித்தெடுத்தல்,
நிலக்கடலை
தோல்
உடைத்து
தரம்
பிரித்தல்,
மிளகாய்
பொடியாக்குதல்,
எண்ணெய்
பிழிந்தெடுக்கும்
செக்கு
இயந்திரம்,
பாக்கு
உடைத்தல்,
பருத்தி
பறித்தல்,
தேயிலை
பறித்தல்,
வெங்காயத்
தாளினை
நீக்குதல்
போன்ற
மதிப்புக்கூட்டும்
பணிகளை
மேற்கொள்வதற்கான
இயந்திரங்களுக்கு
மானியம்
வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவினை சார்ந்த சிறு, குறு விவசாயிகளாக இருந்தால், கூடுதலாக 20% மானியம் அதாவது 60% மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில்
மானியம்
போக,
மீதமுள்ள
தொகைக்கு
வங்கி
மூலம்
கடன்
பெற
விரும்பினால்,
ஒன்றிய
அரசினால்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
வேளாண்
உட்கட்டமைப்பு
நிதி
மூலம்
3% வட்டி
தள்ளுபடியுடன்
கடன்
வசதியும்
தமிழ்நாடு
அரசு
செய்து
தரப்படும்.
மதிப்புக்கூட்டும்
இயந்திரத்தை
இயக்குவதற்கு
மும்முனை
மின்சார
இணைப்புடன்,
இயந்திரத்தை
நிறுவுவதற்கு
சொந்தமாக
கட்டிடம்
வைத்திருக்க
வேண்டும்.
தனிப்பட்ட
விவசாயியாக
இருந்தால்,
சொந்த
நிலம்
இருக்க
வேண்டும்.
இந்த திட்டம் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும்
செயல்படுத்தப்படுகிறது.
கலைஞரின்
அனைத்துக்
கிராம
ஒருங்கிணைந்த
வேளாண்
வளர்ச்சித்
திட்டம்
செயல்படுத்தப்படும்
கிராம
விவசாயிகளுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
இதன்படி, மதிப்புக்கூட்டும்
இயந்திரத்தை
மானியத்தில்
பெற
விரும்புவோர்
உழவன்
செயலி
மூலமாகவோ
அல்லது
https://aed.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு
அருகிலுள்ள
வேளாண்மைப்
பொறியியல்
துறையைச்
சார்ந்த
வட்டார
உதவி
பொறியாளர்
அல்லது
மாவட்ட
செயற்
பொறியாளர்
அலுவலகத்தை
அணுகலாம்.