இல்லம் தேடிக்
கல்வி – தன்னார்வலர்களுக்கான 2 நாள்
பயிற்சி
கொரோனா
பெருந்தொற்றுப் பரவல்
காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும்
மாணவர்களின் கற்றல் இடைவெளி
மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு
தினசரி 1 முதல் 1 % மணிநேரம்
(மாலை 5 மணிமுதல் 7 மணிக்குள்)
கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை
மேம்படுத்தும் வகையிலும்
இடைநிற்றலை முற்றிலும் களைவதற்கும் ஏற்றவகையில் செயல்படுத்தப்படஉள்ள இல்லம்
தேடிக் கல்வி மையங்களுக்கென தேர்ந்தெடுக்கப்படவுள்ள தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள்.
தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடிக்
கல்வியின் முக்கியத்துவம், தன்னார்வலர்கள் பங்களிப்பின் அவசியம்
மற்றும் முக்கியத்துவம், தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துதல், குழந்தைகளை கையாள வேண்டிய விதம்
மற்றும் கற்றல் கற்பித்தல் குறித்தும் முதற்கட்டமாக இருநாள்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 1 – 5 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு ஒரு
பிரிவாகவும் 6-8 வகுப்புகளை கையாளும்
தன்னார்வலர்களுக்கு மற்றொரு
பிரிவாகவும் வழங்கப்படவுள்ளது.