தமிழக நிறுவனங்களுக்கு ஏப்ரல் 6ல் ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் ஆணையர்
தமிழகம்
உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற
தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம்
தேதி வாக்குப்பதிவு நடைபெற
உள்ள நிலையில், மே
2 இல் வாக்கு எண்ணிக்கை
நடைபெறும் என தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது. நடப்பு
ஆண்டும் ஒரு கட்டமாக
தேர்தல் நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல்,
பிரச்சாரம், தேர்தல் அறிக்கை
என தமிழக அரசியல்
களம் பரபரப்புடன் காணப்படுகிறது.
மேலும்
100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில் அரசு மற்றும்
தனியார் நிறுவனங்கள் சார்பில்
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெற
உள்ள ஏப்ரல் 6ம்
தேதி மாநிலத்தில் உள்ள
அனைத்து நிறுவனங்களும் தங்களது
தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க
வேண்டும் என உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தொழிலாளர் ஆணையர்
அவர்கள் வெளியிட்டு உள்ள
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
1951 மக்கள்
பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135பி இன் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெறும்
நாளில் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க
வேண்டும். மேலும் அனைவரும்
வாக்களிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில்
தற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள்
மற்றும் தினக்கூலி உட்பட
அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.