இந்து அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் போட்டித்
தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
தமிழ்நாடு
இந்து சமய அறநிலையத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும்
தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக அனைத்து வகையான
போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி
தற்போது தமிழ்நாடு அரசுப்
பணியாளா் தேர்வு வாரியத்தின் சார்பில் நிலை ஏழு
மற்றும் எட்டு, தமிழ்நாடு
இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள
78 செயல் அலுவலா் பணிக்காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிலை
ஏழு பிரிவில் காலியாக
உள்ள 42 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 17 இறுதி நாளாகும்.
ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி உடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான
எழுத்துத்தேர்வு செப்டம்பா் 10ம் தேதி நடைபெறுகிறது. குழு எட்டு பிரிவில்
காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன்
18 இறுதி நாளாகும். பத்தாம்
வகுப்பு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பா் 11ல் நடைபெறுகிறது.
இந்த
தேர்வுகளுக்கு இந்து
மதத்தைச் சோந்தவா்கள் மட்டுமே
விண்ணப்பிக்க வேண்டும்.
போட்டித்தேர்வுக்கு மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையக்கட்டடத்தில் கட்டணமில்லா பயிற்சி
வகுப்புகள் சிறந்த வல்லுநா்களை கொண்டு நடத்தப்பட உள்ளன.
பயிற்சி
வகுப்பில் குறிப்பிட்ட காலவெளி
இடையில் மாதிரித் தேர்வுகள்
நடத்தப்படும். மேலும்
இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள
செயல் அலுவலா் 78 பணிக்காலியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி
வகுப்புகள் செவ்வாய் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் மட்டும்
நடத்தப்பட உள்ளன.
எனவே,
கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்
கலந்துகொள்ள விருப்பம் உள்ள
மனுதாரா்கள் தங்களது கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஒன்று,
ஆதார் அட்டை நகல்
மற்றும் தமிழ்நாடு அரசுப்
பணியாளா் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அறநிலையத்துறை தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள நகல் ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து
கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்
பதிவு செய்து கொள்ளலாம்.