மாணவர்கள் தேர்வில்
நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி தேர்வு எழுத சில
எளிய வழிமுறைகள்
தேர்வு
எழுத செல்லும் மாணவர்கள்
தங்களை அனைத்து வகைகளிலும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
மிகவும்
முக்கியமான ஒன்று தேர்வு
எழுத செல்லும் மாணவர்கள்
மூன்று மணி நேரத்தை
சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதாகும்.
நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி தேர்வு எழுத சில எளிய வழிமுறைகளை பின்வருமாறு காண்போம்:
1.தேர்வு
எழுத ஆரம்பித்த உடன்
இருக்கும் நேரத்தை பொருத்து
கேள்விகளுக்கு விரைவாக
பதில் எழுத வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்றார்போல குறிப்பிட்ட நேரத்தில்
அதற்கான பதில்களை எழுதி
முடிக்க வேண்டும்.
2.எந்த
கேள்விக்கு முதலில் பதில்
எழுத வேண்டும் என்பதை
முடிவெடுக்க வேண்டும். தெரியாத
கேள்விகளை முதலில் தேர்ந்தெடுத்து அதில் நேரத்தை வீணடிக்க
கூடாது. மாறாக தெரிந்த
கேள்விகள் அனைத்தையும் எழுதி
முடித்துவிட்டு தெரியாத
கேள்விகள் குறித்து யோசிக்கலாம்.
3.கேள்விகளை
தெளிவாக வாசித்து அதனை
முதலில் புரிந்துகொண்டு பதிலளிக்க
ஆரம்பிக்க வேண்டும். தேர்வு
எழுதுவதற்கு முன்னால் விதிமுறைகள் குறித்து நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
4.தேர்வு
மையத்திற்குள் செல்லும்
மாணவர்கள் தேர்வு எழுத
தேவையான அனைத்து பொருட்களையும் கையில் எடுத்துச் செல்ல
வேண்டும். பெண், பென்சில்
போன்றவற்றை கூடுதலாக எடுத்து
செல்ல வேண்டும்.
5.தேர்வு
விரைவாக எழுதி முடிக்க
வேண்டும் என்ற பதற்றத்தில் மாணவர்கள் சில கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கவனக்குறைவாக விடுகின்றனர். எனவே
எழுதி முடித்த கேள்விகளை
அறிவதற்காக அதன் அருகில்
ஏதேனும் டிக் மார்க்
போட்டுக் கொள்ள வேண்டும்.
6.தேர்வு
மையத்தில் மாணவர்கள் பதற்றம்
இல்லாமல், சுற்றுப்புறத்தில் என்ன
நடக்கிறது என்பதை கவனிக்காமல் தேர்வு எழுதுவதில் மட்டும்
கவனத்தை செலுத்த வேண்டும்.
7.மிகவும்
முக்கியமானதாக தேர்வு
எழுத செல்லும் மாணவர்கள்
(light food) சாப்பிட்டு செல்ல வேண்டும்.
தூக்கம் வரக்கூடிய உணவுகளை
தவிர்க்க வேண்டும்.
8.இதனையடுத்து மாணவர்கள் தேர்வு எழுத
ஆரம்பித்தவுடன் தெரிந்த
கேள்விகளுக்கு பதிலளித்து அதனை டெக்கரேட் செய்யக்கூடாது. ஆரம்பத்தில் அழகாக இருந்த
கையெழுத்து தேர்வின் முடிவில்
மாறிவிடும். எனவே அனைத்து
கேள்விகளுக்கும் பதில்
அளித்த பிறகு மாணவர்கள்
மற்ற வேலைப்பாடுகளை செய்யலாம்.
மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம்
குறிப்பிட்ட அந்த மூன்று
மணி நேரத்தில் பதில்களை
சிறப்பாக எழுதி முடிக்கலாம்