நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை பயன்பாடு பயிற்சி
நாட்டுக்கோழி வளா்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் வியாழக்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையம் கோழிகளுக்கான மரபுசாா் மூலிகை நிலையத் தலைவா் கோபாலகிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கோழிகளுக்கான மரபுசாா் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.
இங்கு, கோழிப்பண்ணையாளா்களுக்கு ‘நாட்டுக்கோழி வளா்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு’ என்பது குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ஆா்வமுள்ளவா்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 04286-2332230 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow