ஊரடங்கு காலத்திற்கான உதவி எண்கள் – சென்னை
காவல்துறை
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் காரணத்தால் முழு ஊரடங்கு உத்தரவு
இன்று முதல் அமலில்
உள்ளது. முன்னதாக இரவு
நேர ஊரடங்கு மற்றும்
வார இறுதி ஊரடங்கு
ஏப்ரல் 20ம் தேதி
முதல் நடைமுறையில் இருந்தது.
அதிலும் தொற்றின் பாதிப்புகள் குறையாத காரணத்தால் தான்
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
முழு
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை
விதிக்கப்ட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான மளிகை, இறைச்சி,
பலசரக்கு கடைகள் மட்டும்
பகல் 12 மணி வரை
இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம்
முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முழு
ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள மக்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகளுக்காக சென்னை
காவல் துறையினர் உதவி
எண்களை வெளியிட்டுள்ளனர். அந்த
உதவி மையம் 24 மணி
நேரமும் செயல்படும் என்றும்
அறிவித்துள்ளனர். பொதுமக்கள் 9498181236, 9498181239 ஆகிய எண்களில்
தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்கலாம் என சென்னை
காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.