ஜூன் 1 முதல்
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் காட்டாயம்
இந்தியாவில் தங்க நகை வியாபாரம்
மிக முக்கிய வணிக
தளமாகும். தங்கத்தின் விலை
தொடர்ந்து அதிகரித்து வரும்
நிலையிலும் மக்கள் தங்க
நகைகளை தொடர்ந்து அதிக
அளவில் வாங்கி வருகின்றனர். பொதுவாக ஹால்மார்க் முத்திரை
இடப்பட்டுள்ள நகைகள்
22 கேரட் நகைகளை விடவும்
கூடுதலான விலையில் இருக்கும்.
அதே சமயம் தரமும்
22 கேரட் நகைகளை விட
கூடுதலாக இருக்கும்.
நுகர்வோர்
விவகார செயலர் லீனா
நந்தன் செய்தியாளர்களிடம் தங்கநகை
ஹால்மார்க் விவகாரம் குறித்து
பேசியுள்ளார். அதில்:
தங்க
நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை காட்டாயமாக்குவதற்கு, இதற்கு
முன்னரே பல தடவை
காலக்கெடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது
மீண்டும் ஹால்மார்க் முத்திரை
கட்டாயம் குறித்து மீண்டும்
காலக்கெடு நீட்டிக்க கோரிக்கைகள் ஏதும் பெறப்படவில்லை.
விற்பனை
செய்யப்படும் அனைத்து
தங்க நகைகளுக்கும் ஹால்மார்
முத்திரையுடன் விற்பனை
செய்வதற்கு நகை விற்பனையாளர்களுக்கு அனுமதி அளிக்க
பி.ஐ.எஸ்
முழுமுயற்சி செய்து வருகிறது.
இதனால் வரும் ஜூன்
1ம் தேதி முதல்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகள்
மற்றும் கலைப்பொருட்களுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று
நுகர்வோர் விவகார செயலர்
லீனா நந்தன் கூறியுள்ளார்.