HomeBlogசிகை அலங்கார படிப்புகள்
- Advertisment -

சிகை அலங்கார படிப்புகள்

 

Hairstyle-courses

சிகை அலங்கார
படிப்புகள்

முன்பெல்லாம் ஊருக்கு ஒன்றிரண்டு இருந்த
சிகை அலங்காரக் கடைகள்
அனைத்தும் இப்போது நகரத்தின்
மத்தியில் கூட்டம் அலைமோதும்
இடங்களில் வண்ண வண்ண
விளக்கு அலங்காரத்துடன் நவீன
வடிவில் மாற்றம் அடைந்து
அதிகரித்து விட்டன.

அனுபவ
அடிப்படையில் ஒருவரிடமிருந்து இன்னொருவர் கற்றுக் கொண்ட
சிகை அலங்காரத் தொழில்
இன்று படிப்பாகிவிட்டது.

எல்லா
நகரங்களிலும் முன்னணி
அழகுக் கலை நிறுவனங்கள் இத்துறையில் காலூன்றி வெற்றித்
தடம் பதித்து வருகின்றன.

இப்படி
பெருகிவரும் அழகுக் கலை
நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

மிகளம்
நவீனமான உயர் வசதி
கொண்ட அழகுக் கலை
நிறுவனங்களுக்கு பல
பிரபலங்கள் வருகை தருவதும்,
அந்நிறுவனங்களில அவர்களுக்குச் சிகை அலங்காரம செய்வதும்
சாதாரணமாகிவிட்டது. பிரபலங்களை அடிக்கடி சந்திக்கக்கூடிய வாய்ப்பு
இத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இருக்கிறது. கணிசமான வருமானத்தை தரும்
தொழிலாகளம் இத்துறை மாறிவிட்டது.

அழகுக்
கலைத்துறையில் ஹேர்
ஸ்டைலிங் என்பது மிக
முக்கிய இடத்தைப் பெற்று
வருகிறது. இப்படி அழகுக்கலைத் துறை வளர்ச்சியை நோக்கி
பயணிக்கும் தறுவாயில் ஹேர்
ஸ்டைலிங் தொடர்பான படிப்புகளும் பல தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. அவை
குறித்த விவரங்களைத் தெரிந்து
கொள்வதற்கான ஆர்வம் இளைஞர்கள்
மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஹேர்
ஸ்டைலிங் படிப்புகளைப் பொருத்தவரை குறுகியகால படிப்புகள், அடிப்படை
படிப்புகள், மேம்பட்ட நிலை
படிப்புகள் என்ற மூன்று
வகைகள் உள்ளன.

 

இன்றைய
உலகில் ஆண், பெண்
பாகுபாடின்றி அனைவரும்
முடி பராமரிப்பு குறித்து
அதிக முக்கியத்துவம் கொடுத்து
வருகின்றனர். முடி வெட்டுவது
மட்டுமே என்று இருந்த
நிலை மாறி முடி
பராமரிப்பு, பல்வேறு ஸ்டைல்களைப் பயன்படுத்துவது, முடிக்கு
வண்ணம் தீட்டுவது போன்றவற்றிற்காக அழகு நிலையங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

ஹேர்
ஸ்டைலிங் என்பது முடிவெட்டுவது, வண்ணம் தீட்டுவது, முடியை
நேராக்குவது, முடியைச் சுருள்
ஆக்குவது, ஷாம்பு பயன்படுத்தி சுத்தம் செய்வது என
எண்ணற்ற அம்சங்களைக் கொண்டதாக
மாறிவிட்டது.

திறமையான
ஹேர் ஸ்டைலிங் பயிற்சி
உள்ளவர்களுக்கு இந்தியா
முழுவதுமே அதிக தேவை
உள்ளது. இத்துறையில் கால்
பதித்துள்ள பெரிய நிறுவனங்கள் உரிய கல்வித் தகுதியுடன் சிறப்பான பயிற்சி உள்ளவர்களை மட்டுமே தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்தி வருகின்றன.

பொதுவாக
இத்தகைய அழகுக் கலை
நிறுவனங்களில் வழக்கமான
பணிகளுடன் திருமணம், கார்ப்பரேட் நிகழ்ளகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஹேர் ஸ்டைலிங்
செய்வதற்கான பணியும் வழங்கப்படும். இதற்காக இவர்களுக்கு தனி
பேக்கேஜ் வழங்கப்படுவது கூடுதல்
சிறப்பு.

இதில்
அடிப்படை ஹேர் ஸ்டைலிங்,
டெக்சர் ஸ்டைலிங், பலவிதமான
முடிவெட்டும் முறைகள்,
வண்ணம் பூசும் பயிற்சிகள் உள்ளிட்டவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பயிற்சி காலம்
நிறுவனத்திற்கு நிறுவனம்
மாறுபடுகிறது. 10 நாள்
முதல் 30 நாள் வரையிலான
பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியா
முழுவதும் தனியார் நிறுவனங்கள் இத்தகைய பயிற்சிகளை அளித்து
வருகின்றன. அதுளம் குறிப்பாக
இந்தியாவில் உள்ள சிகை
அலங்கார பெரு நிறுவனங்கள் இத்தகைய பயிற்சிகளை முக்கிய
நகரங்களில் நடத்தி வருகின்றன.10
மற்றும் 12 –ஆம் வகுப்பில்
தேர்ச்சி பெற்றிருந்தால் இத்தகைய
பயிற்சியில் சேர முடியும்.
இந்த நிறுவனங்களின் சிறப்பம்சத்தைப் பொருத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

டிப்ளமோ
இன் ஹேர் ஸ்டைலிங்
,
ஹேர் ஸ்டைலிங் மற்றும்
டிரஸ்ஸிங் இல் அடிப்படை
பயிற்சி, டிப்ளமோ இன்
ஹேர் டிசைனிங், டிப்ளமோ
இன் டிரஸ்சிங் உள்ளிட்ட
பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மூன்று
முதல் ஆறு மாதங்கள்
வரை இந்த பயிற்சி
வகுப்புகள் நடைபெறும். இந்தியா
முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள பெரிய அழகுக்கலை
நிறுவனங்களில் பயிற்சி
கூடங்கள் உள்ளன. 10 மற்றும்
12 –
ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றோர் இந்த பயிற்சியில் சேர முடியும்.

அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் ஹேர்
ஸ்டைலிங், ஹேர் ஸ்டைலிங்
மற்றும் டிரஸிங்கில் மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள், அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் ஹேர்
டிசைனிங் போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 6 முதல்
12
மாதங்கள் வரையிலான இந்த
பயிற்சியில் சேர்வதற்கு 10 அல்லது
12
ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருந்தால் போதுமானது.

இத்தகைய
பயிற்சிகளைப் பெற்று
ஆர்வம் மிக்கவர்கள் பெரிய
அழகுக் கலை நிறுவனங்களில் பணியாற்ற முடியும் அல்லது
சொந்தமாக அழகுக்கலை நிறுவனங்களை நடத்த முடியும். இதுதவிர
தொலைக்காட்சி மற்றும்
எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பைக் கூட
இவர்கள் பெறமுடியும். இன்னும்
சொல்லப்போனால் சினிமா
மற்றும் சீரியல் நடிகர்களின் பர்சனல் ஹேர் ஸ்டைலராகளம் பணியாற்ற முடியும்.

விவரங்களுக்கு அழகுக்கலை நிறுவனங்களின் இணைய
பக்கங்களைப் பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -