ஏப்ரல் 21ல்
காவலர் தேர்வு
தேர்தலால்
தள்ளி வைக்கப்பட்ட, இரண்டாம்
நிலை காவலர் பணிக்கான
உடல் தகுதி தேர்வு,
ஏப்ரல்
21ல்
நடத்தப்பட உள்ளது.
காவல்,
சிறை மற்றும் தீயணைப்பு
துறைக்கு, இரண்டாம் நிலை
காவலர்களாக, 11 ஆயிரத்து, 741 பேரை
தேர்வு செய்ய, சீருடை
பணியாளர் தேர்வு குழுமம்,
எழுத்து தேர்வு நடத்தி,
முடிவை அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு, உடல் தகுதி
மற்றும் உடல் திறன்
தேர்வு நடத்த வேண்டும்.
தேர்தல் காரணமாக, இத்தேர்வு
தேதி குறிப்பிடாமல் தள்ளி
வைக்கப்பட்டது.
தற்போது,
சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்
தகுதி மற்றும் உடல்
திறன் தேர்வை, ஏப்ரல் 21ல் நடத்த
சீருடை பணியாளர் தேர்வு
குழுமம் முடிவு செய்துள்ளது.அதற்கான சுற்றறிக்கை, போலீஸ்
கமிஷனர்கள், ஐ.ஜி.,க்கள்
உள்ளிட்ட உயர் போலீஸ்
அதிகாரிகளுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. தேர்வு
மையங்கள் தயார்படுத்துவது குறித்து,
ஏப்.,5க்குள், குழுமத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.