TNPSC Group 2 Syllabus Full Explanation
TNPSC குரூப் 2 தேர்வு முறை:
முக்கியமாக கவனிக்க வேண்டியது, TNPSC குரூப் 2 தேர்வு 3 கட்டத் தேர்வாக நடத்தப்படுகிறது.
முதற் கட்டத்தேர்வு : முதல் நிலைத் தேர்வு
இரண்டாம் கட்டத்தேர்வு : முதன்மைத் தேர்வு – முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்தேர்வான முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.
மூன்றாம் கட்டத்தேர்வு : நேர்காணல் – முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
இறுதியாக முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு இரண்டிலும் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்கள் அடிப்படையைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுசெய்யப்படுவார்கள் . முதன்மைத் தேர்விற்கான தேர்ச்சிக்கு மட்டுமே முதல் நிலைத்தேர்வின் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நினைவில் கொள்க. இறுதி தேர்வுக்கு முதல் நிலைத்தேர்வின் மதிப்பெண்கள் தேவை இல்லை.
குரூப் -2 தேர்வில் தேர்வில் பொது தமிழ் / பொது ஆங்கிலம் என ஒரு விருப்பமான பாடத்தை நீங்கள் தேர்தெடுக்க வேண்டும் . Group 2 Prelims தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இரண்டாம் நிலைத்தேர்வில் உள்நுழைய கவனமாக உங்கள் விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுங்கள்.
TNPSC குரூப் 2 தேர்வு முறை:
முதல் நிலைத் தேர்வு
கேள்விகள்: 200; மொத்த மதிப்பெண்கள்: 300; மொத்த நேரம்: 3 Hrs;
பொது அறிவு – 75 கேள்விகள்
கணிதம் மற்றும் மன திறன் – 25 கேள்விகள்
பொதுத் தமிழ் / பொது ஆங்கிலம் – 100 கேள்விகள்
மொத்தம் – 200 கேள்விகள்
குறிப்பு: கணிதம் மற்றும் மன திறன் பகுதி பொது அறிவு பகுதியுடன் இணைந்து வரும். எனவே, 25 கணித கேள்விகள் 75 பொது அறிவு கேள்விகள் சேர்த்து மொத்தம் 100 கேள்விகள் இருக்கும். தேர்விற்கு விண்ணப்பிப்பவரின் விண்ணப்பபடிவதில்லையே பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஏதேனும் ஒன்ரை தேர்வு செய்ய வேண்டும்.