வேலைவாய்ப்பகத்தில் நாளை முதல் குரூப்
4 மாதிரித் தேர்வுகள்
தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டு
மையத்தில் குரூப் 4 க்கான
மாதிரித் தேர்வுகள் மே
26ம் தேதி முதல்
நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 4 ஆம் தேதி
முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏற்கெனவே போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவா்கள்
பயன்பெறும் வகையில் மாதிரித்
தேர்வு வகுப்புகள் வாரந்தேர்றும் செவ்வாய்க்கிழமை மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட
உள்ளது.
தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி குரூப் 4 தேர்வுக்கான மாதிரித் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில், 15 அலகுத்தேர்வுகள் மற்றும் 5 முழுத் தேர்வுகள்
சமச்சீா் பாடத் திட்டத்தின்படி நடத்தப்படவுள்ளது.
இம்மாதிரித் தேர்வுகள் மே 26ம்
தேதி முதல் தஞ்சாவூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும்.
எனவே
இம்மாதிரித்தேர்வில் கலந்து
கொள்ள விரும்பும் இளைஞா்கள்
04362 – 237037
என்ற தொலைப்பேசி எண்ணுக்கு
தொடா்பு கொண்டோ அல்லது
8110919990
என்ற வாட்ஸ் ஆப்
எண்ணிலோ பதிவு செய்து
கொள்ளலாம்.