வாழ்த்து அட்டை
தயாரிப்பு
மூல
பொருட்கள்:
டிஜிட்டல்
முறையில் வாழ்த்து அட்டைகள்
செய்யபோகின்றீர்கள் என்றால்
கணினி, அச்சிடும் இயந்திரம்,
ஸ்கானர், மென்பொருட்கள் போன்றவை
தேவைப்படும்.
வாழ்த்து
அட்டைகள் தயாரிப்பதை வீட்டில்
இருந்தவாறும் குறைந்த
முதலீட்டுடன் செய்யலாம்.
இதற்கு கைவினைப் பொருட்கள்,
அட்டை தயாரிக்கும் மட்டைகள்,
அலங்காரப் பொருட்கள் போன்றவையே
தேவைப்படும்.
சந்தை வாய்ப்பு:
வாழ்த்து
அட்டைகள் தயாரிப்பில் முக்கியம்
வகிப்பது அதில் எழுதப்படும் வாக்கியங்கள். ஒருவர்
தனது மனதில் உள்ள
உணர்வினை வாழ்த்து அட்டையினை
வழங்குவதன் மூலமாக அவருக்கு
தெரியப்படுத்த வேண்டும்.
எனவே உணர்வு பூர்வமான
வாக்கியங்கள் எழுதுவது
குறித்து கவனமாக இருக்க
வேண்டும்.
சில
மாதிரி வாழ்த்து அட்டைகளை
தயாரித்து ஒரு புக்
ஷாப்பிலோ அல்லது பல்
பொருள் அங்காடியிலோ கொடுத்து
விற்பனை செய்து பார்க்கலாம். மக்கள் எந்த வித
அட்டைகளை ஆர்வத்துடன் வாங்குகின்றனர் என கவனித்து அதன்படி
தயாரித்தால் நல்ல லாபம்
பார்க்கலாம்.
வணிகம்
தொடர்பானவர்களுக்குக் கூட
இந்த வாழ்த்து மடல்கள்
அதிகம் தேவைப்படும். அப்படியானவர்களைக் கண்டறிந்து அவர்கள்
விரும்பும் விதமாக வசனங்களை
எழுதி அவர்களிடம் விற்பனை
செய்யலாம்.
தற்போது
எல்லோருமே தமக்குத் தேவையானவற்றினை வீட்டில் இருந்தவாறே ஆன்லைன்
மூலம் பெற்றுக் கொள்ளுகின்றனர்.
எனவே
நீங்கள் உங்கள் வாழ்த்து
மடல்களை விற்பனை செய்யக்கூடிய ஆன்லைன் தளங்களை அறிந்து
அதில் நீங்கள் தயாரிக்கும் வாழ்த்து மடல்களை விற்பனை
செய்யலாம்.
இது
ஒரு சிறந்த வழியாக
உங்களுக்கு இருக்கும். நீங்கள்
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விசேச
தள்ளுபடி விலையினை வழங்கலாம்.
என்னதான்
நவநாகரீகம் வளர்ந்தாலும் பேஸ்புக்,
வாட்ஸப், வைபர் போன்றவை
வந்தாலும் வாழ்த்து அட்டைகளுக்கான மவுசு என்றுமே குறையாது.
உங்கள் வித்தியாசமான கற்பனை
வளம் போதும். இன்றே
தொழிலை ஆரம்பியுங்கள்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.