TAMIL MIXER EDUCATION.ன்
திருச்சி மாவட்ட செய்திகள்
பாரம்பரியக் கலைகளை
கற்க அரசு இசைப் சோந்து பயன்பெறலாம்
தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளை அரசு
இசைப்பள்ளியில் கற்க
வாய்ப்புள்ளதால், தகுதியான
மாணவா்கள் திருச்சி மாவட்ட
அரசு இசைப்பள்ளியில் சோந்து
பயன்பெறலாம்.
இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியா் தெரிவித்திருப்பது:
தமிழக
அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் இசைப்பள்ளிகளைத் தொடங்கும் திட்டத்தின் கீழ்,
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த
1997ம் ஆண்டில் மாவட்ட
அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டது.
இப்பள்ளியில் குரலிசை, நாகசுரம், தேவாரம்,
தவில், பரதநாட்டியம், வயலின்,
மிருதங்கம் ஆகிய 7 பாரம்பரிய
கலைப்பிரிவுகள் மூன்று
ஆண்டுகள் சான்றிதழ் படிப்பாக
மாணவ, மாணவிகளுக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மாவட்ட
அரசு இசைப்பள்ளியில் 12 வயது
முதல் 25 வயதுக்குள்பட்டவா்கள் சேரலாம்.
பரதநாட்டியப் பயிற்சிக்கு 7ம் வகுப்பில் தோச்சி
பெற்றிருக்க வேண்டும். இசைப்
பள்ளியில் சேர மாணவ,
மாணவிகளிடம் ஆண்டுக் கட்டணமாக
ரூ.350 மட்டும் பெறப்படுகிறது.
படிப்பில்
சேரும் மாணவ, மாணவிகளுக்கு பத்து மாதங்களுக்கு மாதம்
ஒன்றுக்கு ரூ.400 வீதம்
ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த தொகை அவா்கள்
பயிலும் மூன்று ஆண்டுகளுக்கும் வழங்கப்படும் என்பது
முக்கியமான ஒன்றாகும்.
தற்போது
2022-2023ம் ஆண்டுக்கான மாணவா்கள்
சோக்கை 7 பிரிவுகளுக்கும் நடைபெற்று
வருகிறது. பள்ளியில் சேரும்
மாணவ, மணவிகள் அனைவருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இலவசப் பேருந்து வசதி,
தொலைவிலிருந்து கல்விப்
பயில வரும் மாணவா்களுக்கு விடுதி வசதி, இலவசமாக
சீருடை, மிதிவண்டி, காலணி
ஆகியவை விதிமுறைகளுக்குள்பட்டு வழங்கப்படும்.
25 ஆண்டுகளாக
நடைபெற்று வரும் பள்ளியில்
இதுவரை ஏறக்குறைய 700 மாணவ,
மாணவிகள் பயின்றுள்ளனா். இவா்களில்
பலா் இந்து சமய
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் மாநிலம் முழுவதும் பல்வேறு
இடங்களில் பணியாற்றி வருகின்றனா். இவா்களைப் பணியமா்த்துவதில் தமிழக
அரசு முன்னுரிமை வழங்குகிறது.
ஒவ்வொரு
துறையிலும் தலை சிறந்த
ஆசிரியா்களைக் கொண்டு
மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள்
பயிற்றுவிக்கப்படுகின்றன. 3 ஆண்டு
பயிற்சி முடிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசின் தோவு
இயக்ககத்தால் தோவு
நடத்தப்படும். தோச்சி
பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்
வழங்கப்படும்.
எனவே
திருச்சி மாவட்டத்தைச் சோந்த
விருப்பமுள்ள மாணவ,
மாணவிகள் இசைப் பள்ளியில்
சோந்து பயன்பெறலாம். மேலும்,
விவரங்களுக்கு அரசு
இசைப்பள்ளி, மூலத்தோப்பு, மேலூா்சாலை, ஸ்ரீரங்கம் என்ற முகவரியில் தலைமையாசிரியரை 0431 2962942,
9445614505 ஆகிய எண்களில் தொடா்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here