தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 14.09.2024 அன்று நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற ஏதுவாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு சென்னையில் நடத்தப்பட உள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது.
அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூலம், SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாதக்கால உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் 2024-2025 -ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானிய கோரிக்கையில் “அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில், ஆண்டுதோறும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்படும்” அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 14.09.2024 அன்று நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு Il (தொகுதி II மற்றும் தொகுதி IIA) தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற ஏதுவாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்திடும் வகையில் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக சி.எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் உயர் சாலை மயிலாப்பூர் சென்னையில் நடத்தப்பட உள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் 29.07.2024க்குள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரக scdaplacement@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலையில் 01.08.2024 அன்று சி.எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் உயர் சாலை மயிலாப்பூர் சென்னையில் காலை 10.00 மணியளவில் நடத்தப்பட உள்ள சிறப்பு பயிற்சியில் நேரில் வந்து விண்ணப்பித்து கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Congratulation
Tnpsc group 2