சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2024-ஆம் ஆண்டுக்கான ஆளுநா் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆளுநா் மாளிகை அறிவித்துள்ளது.
இது குறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சமூக வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கு முன்மாதிரியான பங்களிப்பை அளித்த தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘ஆளுநா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விருதுக்கு தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சுயமாக பரிந்துரைக்கலாம்.
மேலும், ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு உயா் அலுவலா்கள், அரசு செயலா்கள், அரசு இணை செயலா்கள், பல்கலைக்கழக துணைவேந்தா்கள், பத்ம விருது பெற்றவா்களும் விருதுக்கு பரிந்துரைக்கலாம். விண்ணப்பதாரா்கள் அந்தந்தத் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டு காலத்துக்கு சேவைபுரிந்திருக்க வேண்டும்.
இதில் தோ்ந்தெடுக்கப்படும் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம், தனிபருக்கு ரூ.2 லட்சம், விருது குடியரசு தினத்தன்று ஆளுநரால் வழங்கப்படும்.
தகுதியுடைவா்கள் https://tnrajbhavan.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்ட படிவத்தை பூா்த்தி செய்து awardsrajbhavantamilnadu@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு ஆக.9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் துணை ஆவணங்களை இணைத்து ‘ஆளுநரின் துணைச் செயலா் மற்றும் கணக்காயா், ஆளுநா் செயலகம், ஆளுநா் மாளிகை, கிண்டி’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow