தமிழக அரசின்
திருமண உதவித்தொகை ரூ.
50000, 8 கிராம் தங்கம் பெறுவது
எப்படி?
தமிழக
அரசு பெண்களின் நலன்
கருதி பலவகையான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
அந்த
வகையில் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது.
அதாவது
தமிழகத்தில் உள்ள ஏழைப்
பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம்
தங்கமும் 25,000 முதல் 50,000 வரை
திருமண உதவி தொகையும்
வழக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த திட்டங்களில் யாரேல்லாம் தகுதியுடையவர்கள், எப்படி
இந்த திருமண உதவி
தொகையை பெறலாம் என்பதை
பற்றி இந்த பதிவில்
நாம்தெரிந்து கொள்ளலாம்.
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
- டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை
மறுமண நிதியுதவித் திட்டம் - ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர்
மகள் நிதியுதவித் திட்டம் - அன்னை தெரசா
நினைவு ஆதரவற்ற பெண்கள்
நிதியுதவித் திட்டம் - டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத்
திருமண நிதியுதவித் திட்டம் - மேல் கூறப்பட்டுள்ள திட்டங்களை பற்றி ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம்.
- கிராமப்புற மற்றும்
நகர்ப்புறங்களில் உள்ள
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி வழங்குகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இந்த
திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும், பெண்
கல்வி நிலையை உயர்த்துவதுமே மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
நினைவு திருமண உதவி
திட்டத்தின் நோக்கம்.
இரண்டு வகையான திட்டங்கள்:
அதாவது
இந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண
உதவி திட்டத்தில் 10-ம்
வகுப்பு படித்த ஏழைப்
பெண்களுக்கு ரூ.25,000 உதவியுடன்
தாலிக்கு 8 கிராம் தங்கமும்
வழங்கப்படுகிறது, அதேபோல்
பட்டம் அல்லது டிப்ளமோ
பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000 உதவி தொகையும்
8 கிராம் தங்கமும் இலவசமாக
வழங்கப்படும்.
வயது நிபந்தனை:
திருமணம் செய்துகொள்ளும் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி
அடைந்திருக்க வேண்டும்,
ஆணிற்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம்.
தகுதிகள் / நிபந்தனைகள்
திட்டம் 1
மணப்பெண்
10ம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம். தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
திட்டம் 2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது
அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து
தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க
வேண்டும். பட்டயப் படிப்பு
எனில், தமிழக அரசின்
தொழில்நுட்பக் கல்வி
இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம்
72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு
பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும். மணமகளின்
தாய் அல்லது தந்தை
பெயரில் உதவி தொகை
வழங்கப்படும். பெற்றோர்
இல்லையெனில், மணமகள் பெயரில்
வழங்கலாம்.
தேவையான சான்றுகள்
- பள்ளிமாற்றுச் சான்று
- நகல் திருமண
அழைப்பிதழ் - வருமானச் சான்று
- 10ம் வகுப்பு
படித்தவர்களாக இருந்தால்
பத்தாம் வகுப்பு மதிப்பெண்
பட்டியல் - பட்டப் படிப்பு
/ பட்டயப் படிப்பு தேர்ச்சி
சான்று - ரேஷன் கார்ட்
நகல் ஒன்று - பாஸ்போர்ட் அளவில்
உள்ள ஒரு புகைப்படம்
அனைத்து சாண்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து திருமணம் ஆகுவதற்கு
முன் 40 நாட்களுக்கு முன்
விண்ணப்பிக்க வேண்டும்.