அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு விவரங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக கருவூல துறையின் செயல்பாடுகள், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.. அதன்படி மாதாந்திர ஊதிய பட்டியல் உள்ளிட்ட அனைத்துமே கணினிமயமாக்கப்பட்டிருக்கின்றன.
அரசு பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி ஓய்வூதியம் பெறுவோரின் விவரங்களும் கணினிமயமாகியிருக்கின்றன. ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகளும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது.
சம்பளம்: அதேபோல, தமிழக அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அத்துடன், அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு தாள்களை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்புகளும் வெளியாகும்.
அந்தவகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு விவரங்கள் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஓய்வூதிய திட்டம்: “பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் தொகுக்கப்பட்டு 1.7.2024 அன்று காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.
cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 5,45,297 தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவம்நிலையில், இந்த அறிவிப்பானது கூடுதல் கவனத்தை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்ல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறை படுத்துவது சாத்தியமற்றது என தமிழக முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.
ஓய்வூதிய திட்டம்: ஆனால், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறது என்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2 நாட்களுக்கு முன்பு நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow