Friday, November 22, 2024
HomeBlogஅரசு ஊழியர்களுக்கு பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு
- Advertisment -

அரசு ஊழியர்களுக்கு பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு

Government employees are entitled to maternity leave even if the child dies during childbirth

TAMIL MIXER EDUCATION.ன்
மத்திய அரசு செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பிரசவத்தின்போது குழந்தை
இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு

பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும் மகப்பேறு
விடுப்பு உண்டு எனமத்திய
அரசு அறிவித்துள்ளது.

இம்மாதிரியான இறப்புகள் தாயின் வாழ்வில்
நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு
இந்த முடிவுகள்எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த
அறிவிப்பை மத்திய பணியாளர்
நலன் பயிற்சி துறை
வெளியிட்டுள்ளது.இதன்படி
குழந்தை இறந்து பிறந்தாலோ
அல்லது பிரசவத்திற்கு பின்னர்
சிறிதுநேரத்தில் குழந்தை
இறந்துவிட்டாலோ இந்த
விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு
முழுவதும் உள்ள மத்திய
அரசு பெண் ஊழியர்கள்
இந்த உத்தரவின்படி இனி
பணிகளிலிருந்து விடுப்பு
எடுத்துக்கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு
என்பது முக்கியமான ஒன்றாக
கருதப்படுகிறது.

ஆனால்,
இந்த விடுப்பை பெறுவதற்கு நடத்தப்பட்ட போராட்டங்கள் கொஞ்சம்நஞ்சமல்ல. ஆனால் இவ்வாறு பிரசவ
கால விடுப்பு கிடைக்கப்பெற்றாலும்,

பிரசவத்தின்போது குழந்தை இறந்துவிடும் காலத்தில்
இந்த விடுப்பு பொருந்துமா என்கிற கேள்வி நீண்ட
நாட்களாக எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது மத்திய
அரசு வெளியிட்டுள்ள உத்தரவு
முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மத்திய
பணியாளர் நலன் பயிற்சி
துறைக்கு தொடர்ந்து பிரசவ
கால விடுப்பு, பிரசவத்தின்போது குழந்தை இறந்து விடும்போது எடுக்கப்படும் விடுப்புகள் குறித்து ஏராளமான கேள்விகள்
வந்தவண்ணமுள்ளன. இந்நிலையில், பிரசவத்தின்போது குழந்தை
இறந்தாலும் மகப்பேறு விடுப்பு
உண்டு என மத்திய
பணியாளர் நலன் பயிற்சி
துறை உத்தரவை வெளியிட்டுள்ளது.

மேலும்
பிரசவத்திற்கு பின்னர்
சிறிது நேரத்திலேயே குழந்தை
உயிரிழந்து விட்டாலும் இந்த
விடுப்பை எடுத்துக்கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவில்:

இந்த
விவகாரம் சுகாதாரம் மற்றும்
குடும்ப நலஅமைச்சகத்துடன் கலந்தாலோசித்து பரிசீலிக்கப்பட்டது. தாயின்
வாழ்க்கையில் நீண்டகால
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குழந்தை
பிறந்த உடனேயே இறப்பு,
அல்லதுஉயிரிழந்து பிறப்பது,
இறப்பு காரணமாக ஏற்படக்கூடிய உணர்ச்சி அதிர்ச்சி ஆகியவற்றை
கருத்தில் கொண்டு, பெண்
மத்திய அரசு ஊழியருக்கு 60 நாட்கள்சிறப்பு மகப்பேறு
விடுப்பு வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளதுஎன
கூறப்பட்டுள்ளது.

மேலும்,
பெண் மத்திய அரசு
ஊழியர் ஏற்கெனவே மகப்பேறு
விடுப்பு
எடுத்திருக்கும் நிலையில்
அவரின் விடுப்பு காலம்
முடிவடையும் தறுவாயில் உள்ள நிலையில் அவரின்
குழந்தை உயிரிழக்கும்பட்சத்தில் அதற்கான
மருத்துவ
சான்றிதழ்கள் கேட்டு
காலம் கடத்தாமல் உடனேயே
அவருக்கு 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு
வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் காலக்கெடு
உள்ளது. அதாவது குழந்தை
28
நாட்களுக்கு உயிரிழந்தால் மட்டுமே இந்த சிறப்பு
விடுப்பு வழங்கப்படும். அதேபோல
இந்த சலுகைகள் இரண்டு
குழந்தைகளுக்கு குறைவான
குழந்தைகள் பெற்றவர்களுக்கு மட்டுமே
வழங்கப்படும்.

அதேபோல
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பிரசவம் நடந்திருந்தால் மட்டுமே இந்த விதிகள்
பொருந்தும்.அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை என்பது மத்திய அரசின்
சுகாதாரத் திட்டத்தின்(CGHS) கீழ்
இணைக்கப்பட்ட அரசு
மருத்துவமனை அல்லது தனியார்
மருத்துவமனை எனவரையறுக்கப்படுகிறது. எம்பேனல்
இல்லாத தனியார் மருத்துவமனையில் அவசரக்கால பிரசவம் நடந்தால்,
அவசரச் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என, DoPT உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு
முழுவதும் அரசு துறைகள்
மெல்ல பலவீனமடைந்து வரும்
நிலையில், மத்திய அரசில்
வேலை வாய்ப்பு என்பது
எட்டா கணியாகவே பலபேருக்கு இருக்கிறது. மத்திய அரசின்
பனிகளுக்கு விண்ணப்பிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது தேவையைவிட பல மடங்கு
அதிகமாக இருக்கிறது. எனவே
இந்த சலுகைகளை தனியார்
நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -