இந்த முறை கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் மாற்றங்கள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்டி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை கடந்த சில நாட்களுக்கு முன் 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது
மதிப்பெண் விவரம்; க்ரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோர் ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கடினமான கேள்விகள்: எப்போதும் கேட்பதை விட இந்த முறை கணிதத்தில் 2 கேள்விகள் கூடுதலாக இருந்தன.
அதேபோல் பொது அறிவு கேள்விகள் அதிக கடினமாக இருந்தன. 10 கேள்விகள் வேறு தரத்தில் இருந்தன . குரூப் 4 தேர்வு என்றாலும் அது குரூப் 2க்கு இணையாக சில கேள்விகள் குரூப் 1க்கு இணையாக கேட்கப்பட்டது. இந்த தேர்வு முன்பை விட கடினமாக இருந்ததால் கட் ஆப் குறையும் வாய்ப்புகள் கூட உள்ளன.
கட் ஆப் குறையுமா?: இதில் பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 – 155ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இப்படித்தான் வழக்கமாக மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் இந்த முறை கடந்த முறையை விட 2 மதிப்பெண் குறைவாக வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow