மதுரையில் தங்க நகை தொழில் பழகுநா் பயிற்சி பெற ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். மதுரையில் தங்க நகை தொழில் பழகுநா் பயிற்சி பெற ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்டத் திறன் பயிற்சி உதவி இயக்குநா் அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள மதுரை ஜூவல்லரி மேனுபேக்சரா்ஸ் கன்சாா்ட்டியம் தனியாா் தங்க நகைகள் தயாரிப்பு நிறுவனத்தில் தங்க நகை தொழில் பழகுநா் பயிற்சி வகுப்பு இலவசமாக நடைபெறுகிறது. படித்த, வேலைவாய்ப்பற்ற, தங்க நகை தயாரிப்பில் ஆா்வமுள்ள ஆண், பெண் இருபாலரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
பயிற்சியின் நிறைவில் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும். தங்க நகை தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு 0452- 4246060, 8489992221, 9150004147 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.