தங்க நகை மதிப்பீட்டாளர், ஆன்லைன் வருமான வரி பயிற்சி
மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் கட்டணத்துடன் கூடிய தங்கநகை மதிப்பீட்டாளர், ஆன்லைன் வருமானவரி பயிற்சி அளிக்கப்படுகிறது.
தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஜன.,22 முதல் 28 வரை காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
சுத்த தங்கம் கணக்கிடுதல், தரம் பார்த்தல் செய்முறை பயிற்சி அளிக்கப்படும். வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராகவும் சுயமாக அடகுக்கடை வைக்கவும் இப்பயிற்சி உதவும்.
ஆன்லைன் வருமான வரி பயிற்சி ஜன.,22 முதல் 25 வரை மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது. வருமானவரி பழைய, புதிய கணக்கீட்டு முறை, தாக்கல் செய்தல், வரியை திரும்பப்பெறும் முறை விளக்கப்படும்.
சுயதொழில் செய்ய விரும்பினால் வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கு வழிகாட்டப்படும். அலைபேசி: 86670 65048, 86956 46417.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow