TAMIL MIXER EDUCATION-ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
வெள்ளாடு, கறவை
மாடு, நாட்டு கோழி
வளர்ப்பு பயிற்சி
திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலை பயிற்சி
மற்றும் ஆய்வு மையத்தில்பல்கலை சான்றிதழுடன் வெள்ளாடு,
கறவை மாடு, நாட்டு
கோழி வளர்ப்பு குறித்த
ஒருமாத பயிற்சிகள் நடக்கிறது.
அதன்
தொடர்ச்சியாக ஜூலை
இரண்டாம் வாரம் புதிய
பயிற்சி வகுப்புகள் தொடங்க
உள்ளன. இதற்கான சேர்க்கை
நடக்கிறது. இதில் சேர
விரும்புவோர் ஜூலை
13க்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
மதுரை,
திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி
மாவட்டங்களில் ஆர்வமுள்ள
கால்நடை விவசாயிகள், சுய
தொழில் துவங்க ஆர்வமுள்ள
இளைஞர்கள், பெண்கள் இதில்
பங்கேற்கலாம். பயிற்சி
விபரங்களை நேரில் அல்லது
0452 2483909,
88254 05260ல் தொடர்பு கொண்டு
அறியலாம்.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
வளர்ப்பு
முறைகள், தீவன மேலாண்மை,
நோய் பாதுகாப்பு மற்றும்
மருத்துவ முறைகள், மத்திய,
மாநில அரசுகள் மற்றும்
வங்கிகள் மூலம் மானியம்
அல்லது மானியமில்லா கடன்
உதவி பெறும் வழிமுறைகள், கொட்டகை அமைத்தல், இனப்பெருக்க மேலாண்மை, விற்பனை வழிமுறைகள், பண்ணை அமைக்கும் திட்ட
அறிக்கை தயாரித்தல், பண்ணையைப்
பார்வையிடல் மற்றும் செயல்முறை
பயிற்சிகள் அளிக்கப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here