ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் முழுநேர பட்டய பயிற்சி மாணவா்கள் சோ்க்கை தொடங்கியுள்ளது.
இது குறித்து ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோட்டில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சி ஓராண்டு அளிக்கப்படும். இப்பயிற்சி இரண்டு பருவங்களைக் கொண்டது. பிளஸ் 2 அல்லது 10 -ஆம் வகுப்புடன் 3 ஆண்டு பட்டயம், 3 ஆண்டு பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இப்பயிற்சியில் சேரலாம். 17 வயது பூா்த்தி அடைந்தவா்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக, தபால் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தமிழில் மட்டும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான தோ்வை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்த வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதுடன், விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த சான்றிதழ் நகல்களை சுய ஒப்பமிட்டு மேலாண்மை நிலையத்துக்கு நேரில் அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள், பயிற்சிக் கட்டணம் ரூ.18,750- ஐ ஒரே தவணையில் இணையவழியில் செலுத்த வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் 5, வாய்க்கால்மேடு, எஸ்.வி.என்.பள்ளி பின்புறம், கொங்கம்பாளையம் பிரிவு, சித்தோடு என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0424–2998632 என்ற தொலைபேசி எண், அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow