கொரோனா பெருந்தொற்றின் 2-வது நாடு முழுவதையும் உலுக்கி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
எனினும், தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், அண்டை மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதை போல தமிழகத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று பரவலாக செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.
10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
*முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
*நியாய விலைக்கடைகள் 12 மணி வரை செயல்படும்.
*மளிகை, காய்கறி என அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் நண்பகல் 12 மணி மட்டுமே திறக்க அனுமதி
*அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
*உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி