UPSC – Geologists Examination (GE) பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
மத்திய அரசு பணியாளர்
தேர்வு வாரியம் (UPSC)
தேர்வின் பெயர்: Geologists
Examination (GE)
பணியின் பெயர்:
1. புவியியல் நிபுணர்
(Geologist)
2. புவியியல் இயற்பியலாளர் (Geophysicist)
3. வேதியியலாளர் (Chemist)
4. ஜூனியர் ஹைட்ரோஜியாலஜிஸ்ட் (Junior Hydrogeologist)
புவியியல் நிபுணர் (Geologist) தகுதி:
i) புவியியல்
அறிவியல், புவியியல், அப்ளைடு
ஜியாலஜி, புவி ஆய்வு,
கனிம ஆய்வு, கடல்
புவியியல், பூமி அறிவியல்
மற்றும் வள மேலாண்மை,
கடல்வழி மற்றும் கரையோர
பகுதிகள் ஆய்வுகள், பெட்ரோலியம் அறிவியல், பெட்ரோலியம் ஆய்வு,
புவிவேதியியல், புவியியல்
தொழில்நுட்பம், புவியியர்பியல் தொழில்நுட்பம் ஆகிய
துறைகளில் முதுகலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
ii) புவியியல்
துறையில் பொறியியல் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
புவியியல் (Geophysicist) தகுதி: இயற்பியல், புவி
இயற்பியல், அப்ளைடு பிசிக்ஸ்,
புவி இயற்பியல் (அப்ளைடு)
ஆகிய துறைகளில் முதுகலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேதியியலாளர் (Chemist) தகுதி: வேதியியல், பகுப்பாய்வு வேதியியல், வேதியியல் (அப்ளைடு)
ஆகிய துறைகளில் முதுகலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் ஹைட்ரோஜியாலஜிஸ்ட் (Junior Hydrogeologist) தகுதி: புவியியல், கடல்
புவியியல், ஹைட்ரோஜியாலஜி, புவியியல்
(அப்ளைடு) ஆகிய துறைகளில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு
நேர்முகத்தேர்வு
வயது: 11 முதல் 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதியளவு: ரூ. 15,000 – ரூ. 50,000 (மாதம்)