SBI Exam (SBI PO & Clerk) பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
பாரத் ஸ்டேட் வங்கி
(SBI)
தேர்வின் பெயர்: SBI Exam (SBI PO
& Clerk)
பணியின் பெயர்:
- ப்ரொபஷனரி ஆபிஸர்
(Probationary Officer) - கிளார்க் (Clerk) / ஜூனியர்
அசோசியேட்ஸ் (Junior Associates)
ப்ரொபஷனரி ஆபிஸர்
(Probationary Officer) தேர்வு செய்யப்படும் முறை:
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத்
தேர்வு - குழு
விவாவதம் - நேர்முகத்
தேர்வு
தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம்
பெற்றிருக்க வேண்டும் அல்லது
அதற்கு சமமான மத்திய
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும்
ஒரு நிறுவனத்திலிருந்து பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
இறுதி
ஆண்டு பட்டதாரிகள், இன்டெகிரெட்டு டூயல் டிகிரி (Integrated Dual Degree
(IDD) சான்றிதழ் பெற்றவர்கள், சார்ட்டரேட் அக்கவுன்டன்ட் (Chartered Accountant)
சான்றிதழ் பெற்றவர்களும் இந்த
தேர்வுக்கு விண்ணபிக்கலாம்.
வயது: 21 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
7.55 லட்சம் – ரூ. 12.93 லட்சம்
(ஆண்டு வருமானம்)
கிளார்க் (Clerk) / ஜூனியர் அசோசியேட்ஸ் (Junior Associates) தேர்வு செய்யப்படும் முறை:
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத்
தேர்வு
தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசால்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு
இந்திய பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
2.40 லட்சம் – ரூ. 2.90 லட்சம்
(ஆண்டு வருமானம்)