IBPS Exam (IBPS RRB PO and CRP Clerks)
பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்:
வங்கி பணியாளர் தேர்வு
வாரியம் (IBPS)
தேர்வின் பெயர்: IBPS Exam (IBPS
RRB PO and CRP Clerks)
மண்டல ஊரக வங்கி
(Regional Rural Banks):
வங்கி
பணியாளர் தேர்வு வாரியமானது (Institute of Banking Personnel Selection (IBPS)) இந்தியாவில் உள்ள சுமார் 60 மண்டல
ஊரக வங்கிகளில் உள்ள
காலிப்பணியிடங்களை எழுத்துத்
தேர்வு மூலமாகவும் அதனை
தொடர்ந்து தனிப்பட்ட நேர்காணல்
மூலமாகவும் நிரப்பி வருகின்றன.
இந்த தேர்வு வாரியத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள மண்டல ஊரக வங்கிகள்:
- பல்லவன்
கிராம வங்கி - பாண்டியன்
கிராம வங்கி
பணியின் பெயர்:
1. Officer Scale – I
தேர்வு செய்யப்படும் முறை:
- முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)
- முதன்மைத்
தேர்வு (Main Exam) - நேர்முகத்தேர்வு (Interview)
தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகம் அல்லது
அதற்கு இணையாக மத்திய
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும்
ஒரு நிறுவனத்திலிருந்து பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் SSC / HSC / Intermediate / Graduation level-ல்
ஆங்கிலப் பாடத்தை கட்டாயமாக
படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்ற சான்றிதழை
கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
29000 – ரூ. 33000 (மாதம்)
2. Officer Scale – II
மண்டல
ஊரக வங்கிகளில் இந்நிலையின் கீழ் வரும் பணிகள்
பின்வருமாறு:
- பொது வங்கி
அலுவலர் (General Banking Officer) - ஸ்பெஷலிஸ்ட் கேடர்
(Specialist Cadre) - தகவல்
தொழில்நுட்ப அதிகாரி (Information
Technology Officer) - பட்டய
கணக்காளர் (Chartered Accountant) - சட்ட
அலுவலர் (Law Officer) - கருவூல
மேலாளர் (Treasury Manager) - சந்தைப்படுத்தல் அதிகாரி (Marketing Officer)
- வேளாண்மை
அதிகாரி (Agricultural Officer)
3.
Officer Scale – III
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒற்றை
நிலை தேர்வு (Single Level Examination)
மற்றும் தனிப்பட்ட நேர்க்காணலின் முடிவுகள்
கொண்டு நிரப்பப்படுகின்றன.
தகுதி:
1.பொது வங்கி அலுவலர் (General
Banking Officer): குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது அதற்கு
இணையான படிப்பில் இளங்கலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வங்கி,
நிதி, சந்தைப்படுத்தல், வேளாண்மை,
தோட்டக்கலை, வனவியல், கால்நடை
பராமரிப்பு, கால்நடை அறிவியல்,
வேளாண் பொறியியல், மீன்
வளர்ப்பு, வேளாண் விற்பனை
மற்றும் ஒத்துழைப்பு, தகவல்
தொழில்நுட்பம், மேலாண்மை,
சட்டம், பொருளாதாரம் மற்றும்
கணக்கியல் ஆகிய துறைகளில்
பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அனுபவம்: ஏதேனும் ஒரு
வங்கி அல்லது நிதியியல்
நிறுவனங்களில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் உயர் பணியாளராக
பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது: 21 ஆண்டுகள் முதல்
32 ஆண்டுகள் வரை இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
33000 – 39000
2. ஸ்பெஷலிஸ்ட் கேடர்
(Specialist Cadre):
தகவல்
தொழில்நுட்ப அதிகாரி (Information Technology Officer)
தகுதி:
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து எலக்ட்ரானிக்ஸ் / கம்யூனிகேஷன் / கம்ப்யூட்டர் சயின்ஸ்
/ இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
ஆகிய துறைகளில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
ASP, PHP, C++,
Java, VB, VC, OCP போன்ற படிப்புகளில் சான்றிதழ்பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அனுபவம்: பட்டம் பெற்ற
துறையில் விண்ணப்பதாரர்கள் ஒரு
வருடம் பணி அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
பட்டய
கணக்காளர் (Chartered
Accountant)
தகுதி:
தி
இன்ஸ்டிடியூட் ஆஃப்
சார்ட்டரேட் அக்கவுன்டன்ட் ஆஃப்
இந்தியா (The Institute of Chartered
Accountants of India) நிறுவனத்தில் இருந்து
பட்டய கணக்காளர் சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பட்டய கணக்காளராக விண்ணப்பதாரர்கள் ஒரு
வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
சட்ட
அலுவலர் (Law Officer)
தகுதி:
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது அதற்கு
இணையான சட்டப் படிப்பில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: வழக்கறிஞராக இரண்டு
வருட அனுபவம் அல்லது
சட்ட அலுவலராக வங்கி
அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 2 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
கருவூல
மேலாளர் (Treasury Manager)
தகுதி:
தி
இன்ஸ்டிடியூட் ஆஃப்
சார்ட்டரேட் அக்கௌன்டன்ட் ஆஃப்
இந்தியா (The Institute of Chartered
Accountants of India) நிறுவனத்தில் இருந்து
பட்டய கணக்காளர் சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகம் அல்லது
நிறுவனத்திலிருந்து MBA பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பட்டம் பெற்ற
துறையில் விண்ணப்பதாரர்கள் ஒரு
வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
சந்தைப்படுத்தல் அதிகாரி (Marketing Officer)
தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகம் அல்லது
நிறுவனத்திலிருந்து சந்தைப்படுத்துதல் பிரிவில் MBA பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பட்டம் பெற்ற
துறையில் விண்ணப்பதாரர்கள் ஒரு
வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வேளாண்மை அதிகாரி (Agricultural Officer)
தகுதி:
குறைந்தபட்சம் 50 சதவீத
மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து வேளாண்மை
/ தோட்டக்கலை / பால் பண்ணை
/ கால்நடை வளர்ப்பு / வனவியல்
/ கால்நடை அறிவியல் / வேளாண்
பொறியியல் / மீன் வளர்ப்பு
ஆகிய துறைகளில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பட்டம் பெற்ற
துறையில் விண்ணப்பதாரர்கள் ஒரு
வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது: மேற்கூறிய அனைத்து
பணிக்களுக்கும் வயது
வரம்பு 21 ஆண்டுகள் முதல்
32 ஆண்டுகள் வரை இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: மேற்கூறிய
அனைத்து பணிக்களுக்கும் மாத
ஊதியம் ரூ. 33000 – ரூ.
39000 ஆகும்.
3.
Officer Scale – III
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கான காலிப்பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் ஒற்றை நிலை
தேர்வு (Single Level Examination) மற்றும்
தனிப்பட்ட நேர்கானல் முடிவுகள்
கொண்டு நிரப்பப்படுகின்றன.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அல்லது அதற்கு
இணையான படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
வங்கி,
நிதி, சந்தைபடுத்துதல், வேளாண்மை,
தோட்டக்கலை, வனவியல், கால்நடை
பராமரிப்பு, கால்நடை அறிவியல்,
வேளாண் பொறியியல், மீன்வளர்ப்பு, வேளாண் விற்பனை, தகவல்
தொழில்நுட்பம், மேலாண்மை,
சட்டம், பொருளாதாரம் மற்றும்
கணக்கர் ஆகிய துறைகளில்
பட்டம் அல்லது டிப்ளமோ
முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அனுபவம்: ஏதேனும் ஒரு
வங்கி அல்லது நிதியியல்
நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் உயர் பணியாளராக
பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
38000 – ரூ. 44000 (மாதம்)
4.
அலுவலக உதவியாளர் (Office Assistants)
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு இரண்டு நிலைகள் (Preliminary and
Main Exam) கொண்ட எழுத்துத் தேர்வும்
அதனை தொடர்ந்து தனிப்பட்ட
நேர்காணல் முடிவுகள் மூலம்
ஆட்கள் நிரப்பப்படுகின்றன.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது அதற்கு
இணையான படிப்பில் இளங்கலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உள்ளூர் மொழியில் (Local Languages) திறமை
பெற்றவராக இருக்க வேண்டும்.
கணினி பற்றிய அடிப்படை
அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
15000 – ரூ. 19000 (மாதம்)