HomeBlogதமிழகத்தில் மே 2ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு? - அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை
- Advertisment -

தமிழகத்தில் மே 2ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு? – அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை

Full curfew in Tamil Nadu after May 2? - Notice has not been issued on behalf of the Government

தமிழகத்தில் மே
2
ம் தேதிக்கு பிறகு
முழு ஊரடங்கு? – அரசு
தரப்பில்
அறிவிப்பு
வெளியிடப்படவில்லை

தமிழகத்தில் CORON நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு
நாள் புதிய உச்சத்தை
அடைந்து வருகிறது. இதனால்
பல்வேறு தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
கடந்த ஏப்ரல் 20ம்
தேதி முதல் இரவு
நேர ஊரடங்கு மற்றும்
வார இறுதி நாளான
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு
ஊரடங்கு அமலில் இருக்கும்
என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் முகக்கவசம் அணிதல்,
தனிமனித இடைவெளி உள்ளிட்ட
விதிமுறைகளை முறையாக பின்பற்ற
வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு
மாநிலங்களில் கொரோனா
பாதிப்பு அதிகரிப்பதை கருத்தில்
கொண்டு 7 நாட்கள் முழு
ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான
கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் அது தொடர்பாக தற்போது
வரை முடிவெடுக்கப்படவில்லை. சட்டமன்ற
தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கில்
கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டதை போலவே, வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில்
மினி ஊரடங்கு அறிவிப்பு
வெளியானது.

இந்நிலையில் வருகிற மே 2ம்
தேதி வாக்கு எண்ணிக்கை
நடைபெற உள்ளது. இதன்
காரணமாகவே தற்போது வரை
முழு ஊரடங்கு குறித்து
தமிழக அரசு முடிவெடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஒரு
தகவல் வேகமாக பரவி
வருகிறது.

அதன்படி
தமிழகம் முழுவதும் வருகிற
மே 2ம் தேதிக்கு
பின்னர் முழு ஊரடங்கு
உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி
அடைந்து உள்ளனர். ஆனால்
முழு ஊரடங்கு குறித்து
அரசு தரப்பில் இருந்து
எந்த ஒரு அதிகாரப்பூரவ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -