மதுரை பெட்கிராட் நிறுவனம் சார்பில் சணல்பொருட்கள் தயாரிப்புகுறித்து பெண்களுக்கான 50 நாட்கள் இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
குறைந்தது எட்டாவது தேர்ச்சி பெற்ற 55 வயது வரையுள்ளவர்கள் பங்கேற்கலாம்.மத்திய அரசின் சான்றிதழ், கைவினை கலைஞர்களுக்கான சான்று வழங்கப்படும். சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு வங்கிக்கடன் பெற வழிகாட்டப்படும். அணுகவேண்டிய முகவரி: பெட்கிராட் நிறுவனம், அருணாச்சலம் தெரு, வடக்குவாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை, அலைபேசி: 89030 03090.