பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு இலவச தொழிற்பயிற்சி
பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றோருக்கு சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் சாா்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் சாா்பில், வாட்ச் மற்றும் கிளாக் ரிப்போ் என்ற மூன்று மாத குறுகிய கால பயிற்சி தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதற்கான இலவச பயிற்சிக்குரிய சோ்க்கை நடைபெறவுள்ளது.
பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், பயிற்சியில் சேர விருப்பம் இருப்பின் அடுத்த மாதம் 22-ஆம் தேதிக்குள் தங்களது அசல் ஆவணங்களான மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, நான்கு புகைப்படங்களுடன் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி விவரம் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநா் / முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஏற்காடு பிரதான சாலை, சேலம் – 636 007 என்ற முகவரிலோ அல்லது 75026 28826 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow