ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இலவச பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு
செவிலியர்களுக்கு வெளிநாட்டு மொழிகளில் இலவசமாக பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் செவிலியர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக அளிக்க தமிழக அரசு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் நேற்று (ஜூன் 24) வெளியிட்ட செய்தி குறிப்பில், “முதல்முறையாக செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது.
வெளிநாட்டு மொழியை கற்க விரும்பும் செவிலியர்கள் பி.எஸ்.சி. நர்சிங் அல்லது டிப்ளமா நர்சிங் படித்திருக்க வேண்டும். செவிலியர்களின் வசதியை கருத்தில்கொண்டு மொழிப்பயிற்சியானது ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்பும் செவிலியர்கள் இதுகுறித்த முழு விவரங்களையும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 63791 79200 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow