துரித உணவுகள்
தயாரிக்க இலவச பயிற்சி
தருமபுரியில் இந்தியன் வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனத்தில் துரித
உணவுகள் தயாரிக்க இலவச
பயிற்சி அளிக்கப்பட உள்ளது
தருமபுரி
மாவட்ட ஆட்சியர் அலுவலக
வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன்
வங்கி ஊரக சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
நிறுவனத்தில், சுய
தொழில் தொடங்க ஆர்வமுள்ள
இளைஞர்களுக்கு அரசு
சான்றிதழுடன் கூடிய
தொழில் முனைவோருக்கான பயிற்சி
இலவசமாக அளிக்கப்படுகிறது.
தற்போது
துரித உணவுகள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர
18 வயது முதல் 45 வயது
வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக கிராமங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ்
உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வரும்
8-ம் தேதி பயிற்சி
தொடங்க உள்ளது.
விவரங்களுக்கு இயக்குநர், இந்தியன் வங்கி
சுய வேலை வாய்ப்பு
பயிற்சி நிறுவனம், ஆட்சியர்
அலுவலக வளாகம், கட்டுமான
தொழிற்சங்க அலுவலகம் அருகில்,
தருமபுரி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.