‘TRIUMPH’ நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி தள்ளிவைப்பு – விரும்புவோர் பதிவு
செய்து கொள்ளலாம்
‘இந்து
தமிழ் திசை’ நாளிதழ்,
FIITJEE உடன் இணைந்து நடத்தும்‘TRIUMPH’
நீட் தேர்வுக்கான இலவச
பயிற்சி மார்ச் 20 தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, இந்த
இலவச பயிற்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பிளஸ்
2 படிக்கும் மற்றும் பிளஸ்
2 தேர்ச்சி பெற்று நீட்
தேர்வுக்குத் தயாராகும்
மாணவ – மாணவியர்களுக்கான இந்தப்
பயிற்சியை அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு FIITJEE நிறுவனம்
நடத்தவுள்ளது. இந்நிலையில் மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று பயிற்சி தொடங்கும்
நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நீட்
பயிற்சிக்கான தேதி
பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த
வாய்ப்பைப் பயன்படுத்தி, பள்ளி
தலைமையாசிரியர்கள் மற்றும்
ஆசிரியர்கள் தங்களது பள்ளியில்
9 முதல் 12-ம் வகுப்பு
வரை படிக்கும் 5 முதல்
10 மாணவர்களின் பெயர்ப் பட்டியலை
கீழ்க்கண்ட எண்ணில் பதிவு
செய்து, தங்கள்பள்ளி மாணவர்களும் இத்திட்டத்தின் மூலமாக
பயன்பெற வழிகாட்டலாம்.
இப்பயிற்சியில் பங்கேற்க பதிவுசெய்யும் அனைத்து
மாணவர்களுக்கும் ‘நீட்
வெற்றியின் அறிவியல்’ என்ற
தொழில் வழிகாட்டுதல் திட்டத்தையும் FIITJEE வழங்கவுள்ளது.
பங்கேற்க
விரும்புவோர் https://connect.hindutamil.in/event/85-triumph-neet.html
என்ற
லிங்க்கில் பதிவு செய்து
கொள்ளலாம். பயிற்சி தொடங்கும்
நாள்
குறித்து மின்னஞ்சல் மூலம்
தெரிவிக்கப்படும். கூடுதல்
விவரங்களுக்கு 9003966866 என்ற
எண் ணில் தொடர்பு
கொள்ளலாம்.