சோலார் மின்சக்தி, மின் வாகன அமைப்பு குறித்த இலவச பயிற்சி
காரைக்குடியில் சோலார் மின்சக்தி, மின் வாகன அமைப்பு குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுவதாக மதுரை சிறு, குறு, நுண் தொழில் நிறுவன உதவி இயக்குனர் ஆர்.உமா சந்திரிகா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, மத்திய அரசின் சிறு, குறு தொழில் நிறுவனம் சார்பில் காரைக்குடி அழகப்பா பல்கலை மகளிரியல் துறையில் டிச., 27 முதல் பிப்., 8 ம் தேதி வரை இலவச சோலார் மின் சக்தி மற்றும் மின் வாகன அமைப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும். முதலில் வரும் 25 பேருக்கு மட்டுமே இப்பயிற்சி தரப்படும். வயது 18 முதல் 45க்குள், குறைந்தது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.சி., மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தரப்படும். சோலார் மின் உற்பத்தியை துவக்கும் விதம், வணிக ரீதியான மின்வாகன தயாரிப்பு, அதை சந்தைப்படுத்துதல், ஜெம் போர்டல் மூலம் எப்படி விற்பனை செய்வது போன்ற பயிற்சி அளிக்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஆதார் கார்டு, பள்ளி அல்லது கல்லுாரி மாற்றுச்சான்று, ஜாதி சான்று நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை ஆர்.உமா சந்திரிகா, உதவி இயக்குனர், எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி அலுவலகம், எண் 11, கே.புதுார், மேலுார் மெயின் ரோடு, டான்சிட்கோ தொழிற்பேட்டை, மதுரை – 625 007க்கு அனுப்பவும்.
மேலும் விபரத்திற்கு 0452 – 2918 313ல் தெரிந்து கொள்ளலாம், என்றார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow