நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற 23ம்தேதி மீன்களுக்கான தீவனம் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து வேளாண் அறிவியில் நிலைய தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் வேAளாண் நிலையத்தில், வருகிற 23ம்தேதி காலை 10 மணிக்கு மின்களுக்கான தீவனம் தயாரிக்கும் முறைகள் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், மீன்களுக்குத் தேவையான இயற்கை உணவு மற்றும் செயற்கை உணவு தாயாரிக்கும் முறைகள் மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.
மேலும், உணவு மேலாண்மை, தண்ணீர் மேலாண்மை பற்றியும் பயிற்சி அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் மூலம் மீன் வளர்ப்புக்குள்ள மானியம் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சியில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவாகள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்தை, 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.