
கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 26-ம் தேதி மகூர் மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் க.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு மகூர் மீன் வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், மீன் பண்ணைக் குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணைக் குட்டை அமைக்கும் முறைகள், மீன் குஞ்சு தேர்வு, உணவு மற்றும் நோய் மேலாண்மை முறைகள், மீன் தீவனம் தயாரிக்கும் முறைகள், சந்தைப் படுத்துதல் முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் வேலையில்லாத பட்டதாரிகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் 04286 – 266345, 266650, 73585 94841 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்குப் பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.