இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் இலவச பயிற்சி
மானகிரி கனரா வங்கி சார்பில், இயங்கி வரும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு இவ்வாண்டு ஏப்ரல் துவக்கத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் கம்ப்யூட்டர் அக்கவுன்டன்சி, போட்டோகிராபி அண்ட் வீடியோகிராபி, ஜூட் ப்ராடக்ட் தயாரிக்கும் பயிற்சி மற்றும் அழகுக்கலை, பிரிட்ஜ், ஏசி, மற்றும் அலைபேசி பழுது நீக்கும் பயிற்சி, ஆடு மாடு கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற 8ம் வகுப்பும் அதற்கு மேலும் படித்திருக்க வேண்டும்.
வயது 18 முதல் 45க்குள் உட்பட்டவராக இருக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இலவச தங்குமிடம் சீருடை உணவு மற்றும் தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்படுவதோடு, தொழில் தொடங்க வங்கிக்கடனும் ஏற்பாடு செய்து தரப்படும்.
விருப்பமுள்ளவர்கள் கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையம், நெசவாளர் காலனி, மானகிரி ரோடு காரைக்குடி என்ற முகவரிக்கோ அல்லது 73395 89695, 98653 40500 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம் என பயிற்சி மைய இயக்குனர் எம்.ரகுநாதன் தெரிவித்தார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow