TNPSC
குருப் 2, 2ஏ பணியிடங்களுக்கு இலவச பயிற்சி
விருதுநகர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலக
தன்னார்வ பயிலும் வட்டம்
வாயிலாக மத்திய, மாநில
அரசால் அறிவிக்கப்படும் அனைத்து
விதமான போட்டி தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TNPSC.,
குருப் 2, 2ஏ காலி
பணியிடங்களுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள் காலை
10.30 மணி முதல் மதியம்
12.30 மணி வரை மார்ச்
7 முதல் தினசரி விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இப்பயிற்சியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பங்கேற்போர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார் பயிலம்
வட்ட நுாலகத்தில் தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
https://tamilnaducareerservices.tn.gov.in/
ல் காணொளி காட்சி
மூலம் கற்பித்தல், பாடக்குறிப்புகள், புத்தகங்கள், மாதிரி
வினாத்தாள்கள் பயன்படுத்தி கொள்ளலாம். விருப்பம் உள்ளோர்
96777 34590, 93841 35550க்கு குறுஞ்செய்தியாக அனுப்பி
பதிவு செய்து கொள்ளலாம்.