Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வ
பயிலும் வட்டம் வழியாக
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா நோய்த்
தொற்று காரணமாக சமூக
இடைவெளியை கருத்தில் கொண்டு
நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்த இயலவில்லை. தேர்வர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில்
கிராமப்பகுதி மாணவர்களும் இப்போட்டித் தேர்வுகளை எளிதில்
எதிர்கொள்ளும் வகையில்
இணையதளம் வழியாக உரிய
செயலி வழியாக பயிற்சி
அளிக்கும் வழிமுறைகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
www.tamilnaducareerservices.tn.gov.in.registration என்ற இணையதளத்தில் காணொலி
வழி கற்றல், மின்னணு
பாடக் குறிப்புகள், மின்புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம்,
தந்தை மற்றும் தாய்
பெயர், முகவரி, ஆதார்
எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து
உள்ளே நுழைந்து, போட்டித்தேர்வு என்பதை தேர்வு செய்ய
வேண்டும். பயனீட்டாளர் பெயர்
மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தேர்விற்கு தயாராகிறோம் என்பதை தேர்வு
செய்து அதில் வரும்
பாடக்குறிப்புகளை தமிழ்,
ஆங்கிலத்தில் இலவசமாக
பதிவிறக்கம் செய்யலாம். மாதிரி
தேர்விற்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,
தற்போது தமிழ்நாடு சீருடைப்
பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக
10906 இரண்டாம் நிலை காவலர்
(POLICE CONSTABLE) பணி காலியிடங்களுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி
காலியிடத்திற்கு இணையம்
வழியாக விண்ணப்பித்திட 26.10.2020 அன்று
இறுதி நாள் ஆகும்.
எனவே இப்போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச
இணையதள வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்
சார்பில் அக்.7 அன்று
துவக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள
விருப்பம் உள்ளவர்கள் 9499055913 மற்றும்
04328-225352 என்ற அலைபேசி எண்ணில்
தொடர்பு கொண்டு பதிவு
செய்து கொண்டு இப்பயிற்சி வகுப்பில் கலந்து பயன்பெறலாம்
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post: