பெரியநாயக்கன்பாளையத்தில் கிராமப்புற பெண்களுக்கு, வீட்டு மின் சாதனங்கள் பழுதுபார்த்தல் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம், கிராமப்புற மக்களுக்கு பல்வேறு இலவச தொழில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இங்கு, கோவை தெற்கு லேடீஸ் இன்னர் வீல் அமைப்புடன் இணைந்து, கிராமப்புற பெண்களுக்கு, வீட்டு மின் சாதனங்கள் பழுது பார்த்தல் பயிற்சியை ஒரு மாதம் நடத்துகிறது. மிக்சி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ், வாஷிங் மெஷின், குக்கர், காஸ் ஸ்டவ் உள்ளிட்டவை பழுதுபார்த்தல், ஸ்மார்ட் போன் ஆபரேட்டர் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
கிராமப்புற பெண்களுக்கு பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன், சான்றிதழ் வழங்கப்படும். சுய தொழில் செய்பவர்களுக்கு, வங்கி கடன் பெற ஆலோசனை வழங்கப்படும்.பயிற்சியில் சேர, அடிப்படை கல்வி, 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளோர், ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன், வரும் 15ம் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு, ‘ஒருங்கிணைப்பாளர், தேசிய மனித மேம்பாட்டு மையம், குப்பிச்சிபாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் கோவை’ என்ற முகவரியிலோ, மொபைல் போன் 81223 22381 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, மையத்தின் இயக்குனர் சகாதேவன் தெரிவித்தார்.