TAMIL MIXER EDUCATION.ன்
TNUSRB செய்திகள்
வேலைவாய்ப்பு அலுவலகம்
சார்பில் காவலா் தேர்வுக்கு இலவச பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வு
வாரியத்தால் 3,552 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,
2ம் நிலைக்காவலர் 3,271 பணியிடமும், 2ம் நிலை சிறைக்காவலர் 161 பணியிடமும் மற்றும் தீயணைப்பாளர் 120 பணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி
தேர்விற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் அதற்கான
இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்
நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
நேரடியாக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள
விருப்பம் உள்ளவர்கள். தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வு
வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண்
ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை
நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
மேலும்,
விவரங்களுக்கு 044 27237124
என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
மேலும்,
இப்பயிற்சி வகுப்புகள் வரும்
26ம் தேதி தொடங்க
உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here