HomeBlogTNPSC குரூப்-1, 2, 3, 4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
- Advertisment -

TNPSC குரூப்-1, 2, 3, 4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

 

free training for competitive exams 2 2129410946 Tamil Mixer Education

போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்தியமாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய பணிக்காலியிடங்களுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்பு நாளை (திங்கட்கிழமை) முதல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

பயிற்சி வகுப்பினை கலெக்டர் தொடங்கி வைக்கிறார். பயிற்சி வகுப்புகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் போட்டித்தேர்விற்கான சிறந்த பயிற்றுனர்களை கொண்டு வேலை நாட்களில் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது.

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9894333557,
9499055914
என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -