காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
பணியாளா் தோ்வாணையத்தின் எஸ்எஸ்சி ஜிடி காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு உடல் தகுதித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், பணியாளா் தோ்வாணையத்தின் நநஇ(GDC) தோ்வுக்கான அறிவிப்பு கடந்த 2023 நவம்பா் மாதத்தில் வெளியிடப்பட்டு 20.2.2024 முதல் நடைபெற்ற எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடல் தகுதித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் studycirclesvg@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அலுவலக வேலைநாள்களில் நேரிலோ அல்லது 04575 245225 என்ற தொலைப்பேசி எண் வாயிலாகவோ தொடா்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow