வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டிதேர்வுக்கு இலவச பயிற்சி
வகுப்புகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி–II தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
வேலைநாடும் இளைஞர்கள் படித்து
பயன்பெறும் வண்ணம் தன்னார்வ
பயிலும் வட்டம் என்ற
பயிற்சி மையம் இயங்கி
வருகிறது. இப்பயிற்சி மையத்தின்
மூலமாக பல்வேறு வகையான
போட்டித் தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்திடத் தேவையான
பல்வேறு புத்தகங்கள், மாதாந்திர
போட்டி இதழ்கள் மற்றும்
பத்திரிக்கைகள் அடங்கிய
நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
CORONA நோய் பரவல் காரணமாக
2020 ஆண்டு மார்ச் மாதம்
முதலே, தன்னார்வ பயிலும்
வட்டங்கள் வாயிலாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் நாளது தேதி
வரை இணைய வழியில்
நடைபெற்று வந்தது.
தற்போது
மாணவர்கள் பயன்பெறும் வகையில்
அரசின் நிலையான வழிகாட்டி
நெறிமுறைகளை பின்பற்றி நேரடியாக
மாணவர்களை கொண்டு பயிற்சி
வகுப்புகள் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி உரிய
முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து
வரவேண்டும் மேலும், சமூக
இடைவெளியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தற்போது
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் தொகுதி–II
தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
போட்டித் தேர்வுகள் எழுதி
வெற்றி பெறுவதற்குத் தேவையான
இலவச பயிற்சி வகுப்புகளை இவ்வலுவலக தன்னார்வ பயிலும்
வட்டத்தின் வாயிலாக 17.2.2021 (புதன்கிழமை) முதல் நேரடியாக நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சிவகுப்புகள் அலுவலக வேலைநாட்களில் தினமும் காலை 10 மணி
முதல் பிற்பகல் 5 மணி
வரை நடத்த உரிய
திட்ட நிரல் மற்றும்
கால அட்டவணைப்படி நடத்திட
திட்டமிடப்பட்டுள்ளன. இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், இதுபோன்ற போட்டித்
தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களையும் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் பயிற்சி
வகுப்புகளின் போது
பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்படும்.
எனவே,
இந்த இலவச பயிற்சி
வகுப்புகளில் கலந்து
கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள்
இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.