மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், 18 – 45 வயதிற்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கோவையில் தொழில்முனைவோர் பயிற்சியை நடத்தவுள்ளது.
வரும் செப்., மாதம் துவங்கவுள்ள பயிற்சியில், சிறுதானியங்களிலிருந்து கேக், லட்டு, பிஸ்கட் ரெடி மிக்ஸ், மற்றும் மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் சணல் நாரிலிருந்து, லேப்டாப் பேக் தயாரித்தல் போன்ற பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சி ஒரு மாத கால அளவில, இலவசமாக, நிர்மலா மகளிர் கல்லுாரி ரிதம் வளாகத்தில் அளிக்கப்படவுள்ளது.பல்வேறு தொழில்வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்தும் பயிற்சியளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு, மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இதுகுறித்து, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன திட்ட அதிகாரி ஜெயசங்கர் கூறுகையில், பயிற்சியில் சேர விரும்புபவர்கள் வரும், 30ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, 97906 25702, 89404 87600 ஆகிய எண்களுக்கு, குறுஞ்செய்தி மூலம் தங்கள் பெயர் உள்ளிட்ட விபரங்களை அனுப்ப வேண்டும், என்றார்.