கல்வி உதவித்
தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு
பள்ளிக்கல்வித்துறை உடுமலை கல்வி
மாவட்டம் மற்றும் உடுமலை
கலிலியோ அறிவியல் கழகம்
சார்பில் தேசிய வருவாய்
வழி மற்றும் கல்வி
உதவித் தொகைக்கான திட்டத்
தேர்வு நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வு
வருகிற 5-ந் தேதி
நடத்த திட்டமிடப்பட்டடுள்ளது. அவ்வகையில், 8-ம் வகுப்பு படிக்கும்
மாணவர்கள் தேர்வு எழுதலாம்.
இதற்கு 50 ரூபாய் கட்டணத்துடன் பள்ளி வாயிலாக விண்ணப்பிக்க, வரும் 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் வெற்றி பெறும்
மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்
உதவித் தொகை வழங்கப்படும். தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானதாகும்.
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை 2-ந்தேதி முதல்
மாலை நேரத்தில் இலவச
பயிற்சி வகுப்பு நடத்தப்பட
உள்ளது. இதற்கான ஆலோசனைக்
கூட்டம், பார்க் ரோடு
நகராட்சி பள்ளியில் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், மனோகரன் ஆகியோர்
பயிற்சி வகுப்பு நடத்துவது
குறித்து ஆசிரியர்களிடம் விளக்கிப்
பேசினர்.
ஆசிரியர்கள் லீலாகண்ணன், சந்திரசேகர் ஆகியோர்
பங்கேற்றனர். இப்பயிற்சியில் கலந்து
கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஒருங்கிணைப்பாளரை 8778201926 என்ற
செல்போன் எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.