போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார
சேவை மையம் சார்பில்,
போலீஸ் தேர்வுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
புதுச்சேரி துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் போலீஸ் பணிக்கான
உடல்தகுதி தேர்வு நடந்து
வருகிறது. இந்த உடல்தகுதி
தேர்வில் தேர்ச்சிபெற்ற எஸ்.சி.,
– எஸ்.டி., வகுப்பைச்
சேர்ந்த மாணவர்களுக்கு எழுத்து
தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள்ஆதி திராவிடர்
மற்றும் பழங்குடி இனத்தவர்கள் வாழ்வாதார சேவை மையத்தில்
நடந்து வருகிறது.
இதில்,
போலீஸ் தேர்வுக்கான அனைத்து
பாடங்களும் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்
நடத்தப்படுகிறது.இங்கு
பயில விருப்பம் உள்ள
மாணவர்கள், மையத்தை நேரில்
அணுகி, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சேவை
மையம் ரெட்டியார்பாளையம், ஸ்ரீகுமரன் ஸ்டோர்ஸ் எதிரில், கனரா
வங்கியின் 2ம் தளத்தில்
செயல்பட்டு வருகிறது. மேலும்,
விபரங்களுக்கு 0413 2200115 எண்ணில்
தொடர்பு கொள்ளவும்.