குரூப் 4 தேர்வுக்கு ஞாயிறுதோறும் இலவச
பயிற்சி வகுப்பு – பொள்ளாச்சி
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகம்
மற்றும் பொள்ளாச்சி வருவாய்துறை சார்பில், TNPSC, குரூப்
– 4 தேர்வுக்கான, இலவச பயிற்சி
வகுப்பு, பொள்ளாச்சியில் துவங்கப்பட்டது.
அரசு
வேலைக்காக, போட்டித்தேர்வுக்கு தயார்
செய்து கொண்டு இருக்கும்
வேலை தேடும் பொள்ளாச்சி பகுதி இளைஞர்களின் வசதிக்காக
துவங்கப்பட்ட இலவச
பயிற்சி வகுப்பு, வருவாய்துறை அலுவலக ஊழியர் சங்க
கட்டடத்தில் நடக்கிறது.
நிகழ்ச்சியில், துணை தாசில்தார் மூர்த்தி
முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கோவை
மண்டல இணை இயக்குனர்
ஜோதிமணி, பயிற்சியை துவக்கி
வைத்து பேசுகையில், ”போட்டித்தேர்வு எதிர்கொள்ளும் இளைஞர்கள்
தன்னம்பிக்கையுடன் உரிய
பாடத்திட்டத்தின்படி தயார்
செய்வதுடன், மாதிரி தேர்வுகள்
எழுதி சுய பரீட்சை
செய்து கொள்ள வேண்டும்.
இந்த
மாதிரி தேர்வுகள், வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாகவும், இணைய
வழி மற்றும் நேரடியாகவும் நடத்தப்படும், என்றார்.
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலர்
சத்தியபார்வதி, பயிற்சி
வகுப்பு சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை,
10:00 முதல் மாலை, 6:00 மணி
வரை நடைபெறும்.